தூத்துக்குடியில் வருகிற 23ம் தேதி மாநகர தி.மு.க பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற உள்ளது என்று வடக்கு மாவட்ட செயலாளா் அமைச்சர் பி.கீதாஜீவன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடி மாநகர தி.மு.க பிரதிநிதிகள் கூட்டம் வருகிற 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கலைஞா் அரங்கத்தில் மாநகர அவைத்தலைவா் கோ. ஏசுதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில், முத்தமிழறிஞர் கலைஞர் 102 வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது, தூத்துக்குடி மாநகரத்திற்கு உட்பட்ட 6 பகுதிகளிலும் BLC கூட்டம் நடத்துவது, 26.05.2025 அன்று மறைந்த தூத்துக்குடி மாவட்ட தி.மு.க செயலாளர் அண்ணாச்சி என்.பெரியசாமி அவர்களின் 8 –ம் ஆண்டு நினைவு தினம், மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
கூட்டத்தில் தூத்துக்குடி மாநகரத்திற்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், மாநகர, பகுதி, வட்டக் கழகச் செயலாளா்கள், நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், கழக சார்பு அணிகளின் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், மாமன்ற உறுப்பினா்கள், மற்றும் சிறப்பு அழைப்பாளா்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


