தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் “கடற்பாசி வளர்ப்பு மற்றும் மதிப்புக் கூட்டப்பட்டப் பொருட்கள் தயாரித்தல்” குறித்த ஒருநாள் பயிற்சி வருகிற 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடியின் மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை வாயிலாக வருகின்ற மே மாதம் 26ஆம் தேதி (திங்கள்கிழமை) “கடற்பாசி வளர்ப்பு மற்றும் மதிப்புக் கூட்டப்பட்டப் பொருட்கள் தயாரித்தல்” என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.
இப்பயிற்சியில் கடற்பாசி வளங்கள் மற்றும் வகைகள், வளர்ப்பு முறைகள் மற்றும் அதிலுள்ள சவால்கள், கடற்பாசியைப் பயன்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் முறைகள், அரசு திட்டங்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த தொழில்நுட்பங்கள் கற்பிக்கப்படவுள்ளன. கடற்பாசி வளர்ப்பில் ஆர்வம் உள்ள மீனவர்கள் மற்றும் பொது மக்களுக்கும் இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்குப் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ.300. பயிற்சியில் பங்குபெற ஆர்வம் உள்ளவர்கள் தங்களது பெயர்களை முன்பதிவு செய்து கொள்ள 8870389155, 8122382403, 9892045661 மற்றும் 9994450663 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளவும். கடற்பாசி வளர்ப்பில் ஆர்வமுடையவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி முதல்வர் தெரிவித்துக்கொள்கிறார்.


