தூத்துக்குடியில் முழுமைத்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு நபரும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட 60 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ எழுத்து பூர்வமாக தெரிவிக்கலாம் என ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் முழுமைத்திட்டம் தமிழ்நாடு நகர் ஊரமைப்புசட்டம் 1971 பிரிவு 24 உட்பிரிவு 2-ன்கீழ் (தமிழ்நாடுசட்டம் 1972 பிரிவு 35)-ன்படி முழுமைத் திட்டம் தயாரிப்பு செய்து வெளியீடு மற்றும் அனுமதி விதிஎண் 17-ன்படி அறிவிப்பு செய்யப்படுகிறது. நகர் ஊரமைப்பு அலுவலகத்தால் தயாரிக்கப்பட்ட தூத்துக்குடி முழுமைத்திட்டம் அரசாணை எண் 44, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் (ந.வ4(2) துறை, நாள் 13.03.2025-ல் கொடுக்கப்பட்டுள்ள இணக்கத்தின்படி இதன்மூலம் வெளியிடப்படுகிறது.
தூத்துக்குடி முழுமைத்திட்டம் நிலஉபயோக வரை படம் மற்றும் முழுமைத் திட்டஅட்டவணை இவ்வலுவலக வேலை நாட்களில் நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர், மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், 106ஜெ-37, மில்லர்புரம் 2வதுதெரு, தூத்துக்குடி – 628 008 என்ற அலுவலக முகவரியில் இலவசமாக ஆய்வு செய்யலாம். திட்டத்தின் நகல் தூத்துக்குடி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தால் ஒருபிரதி ரூ.5000/- என்ற விலைக்கு விற்பனைக்கு உள்ளது.
முழுமைத் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட எந்த ஒருநபரும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட 60 நாட்களுக்குள் முழுமைத்திட்டம் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை மற்றும் ஆலோசனை இருப்பின் அதனை நகர்ஊரமைப்பு உதவிஇயக்குநர், மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், 106 ஜெ-37, மில்லர்புரம் 2வதுதெரு, தூத்துக்குடி – 628008 என்ற முகவரியில் நேரிலோ அல்லது masterplanttkd@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ எழுத்துபூர்வமாக தெரிவிக்கலாம் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


