முடிவைத்தானேந்தல் பகுதியில் “இலவச கண் மருத்துவ முகாம்” நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல் விஏஓ அலுவலகம் அருகில் இனிய உதயம் SBR FUELS பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட், மற்றும் நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை, சார்பில் “இலவச கண் மருத்துவ முகாம்” நடைபெற்றது.
இதில், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்புரை, கண்ணில் பூ உடையவர்களை கண்டறிந்து அவர்களுக்கு இலவசமாக நவீன முறையில் கண்ணில் லென்ஸ் பொருத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அப்பகுதி மக்கள் பலர் கலந்து காெண்டனர். முகாம் ஏற்பாடுகளை நியூ பாசக்கரங்கள் டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


