திருநெல்வேலி தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு துப்பாக்கி சுடும் தளம் அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டத்திற்கு செல்லும் பாதையில் நான்குவழிச்சாலையில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் கார் ஒன்று எரிந்த நிலையில் நின்றதாக அந்த வழியாகச் சென்றவர்கள் முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரை சோதனை செய்தபோது கார் பின்பக்க சீட்டில் எரிந்த நிலையில் ஒரு சடலம் ஒன்று கிடந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப வரவழைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையில் அதிகாலை 5 மணி அளவில் இந்த இடத்தில் கார் எரிந்து கொண்டிருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
ஏரோ ஒரு நபரை மர்மநபர்கள் அழைத்து வந்து இந்த இடத்தில் வைத்து கொலை செய்து அவரது உடலை பின்சீட்டில் போட்டு காரை தீ வைத்து கொளுத்தி விட்டு சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு செய்தியாளர்களை செல்வதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வல்லநாடு துப்பாக்கி சூடும் தளம் அருகே நான்கு வழி சாலை ஓரத்தில் காரில் ஒரு நபர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


