தூத்துக்குடி மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மே 20ம் தேதி தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மத்திய அரசின் தொழிலாளர் விவசாய விரோத நடவடிக்கைகளையும், கார்பரேட் ஆதரவு பொருளாதார கொள்கைகளையும், தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கும் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடக் கோரியும், வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.26000 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும், அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதமியம் ரூ.9000 வழங்க வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் மே 20 அன்று அறிவித்த வேலைநிறுத்தத்தை நாட்டில் தற்போது நிலவும் சூழல் காரணமாக ஜூலை 9 க்கு தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளன.
வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்ட மே-20 அன்று வேலைநிறுத்தத்தில் அறிவிக்கப்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்த கேட்டுக் கொண்டுள்ளன. இது குறித்து திட்டமிடுவதற்காக தூத்துக்குடி மாவட்ட அனைத்து தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம் சிஐடியு அலுவலகத்தில் ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் த.சிவராமன் தலைமையில் நடைபெற்றது.
ஐஎன்டியுசி சார்பில் மாநில தணைத்தலைவர் ராஜ், பாலகிருஷ்ணன், சுரேஷ்குமார், தொழிலாளர் முன்னேற்ற பேரவை சார்பில் மாவட்டச் சயெலாளர் சுசீ.ரவீந்திரன், கருப்பசாமி, ராமசாமி, சிஐடியு சார்பில் மாவட்டச் செயலாளர் ரசல், அப்பாதுரை, மா.முருகன், சங்கரன், மாரியப்பன், பெருமாள், காசி, டென்சிங், ஏஐடியுசி சார்பில் மாவட்டச் செயலாளர் லோகநாதன், மாவட்ட பொருளாளர் பாலசிங்கம், ஹெச்எம்எஸ் சார்பில் மாவட்டத் தலைவர் ராஜ்குமார், ராஜலெட்சுமி, ஏஐசிசிடியு சகாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மே-20 அன்று தூத்தக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய 3 மையங்களில் 2000 பேர் பங்கேற்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் ஆர்பாட்டத்தில் விவசாயிகள், மத்தியதர வர்க்க ஊழியர்களும் பெருமளவில் பங்கேற் உள்ளனர், ஐக்கிய விவசாயிகள் முன்னணி தலைவர்களை பங்கேற்க அழைக்கவும் முடிவு செய்யப்பட்டது. அனைத்து தொழிற்சங்க தலைவர்களோடு விவசாயிகள் ஐக்கிய முன்னணி சார்பில் கோவில்பட்டியில் கிருஷ்ணமூர்த்தி, தூத்துக்குடியில் புவிராஜ், திருச்செந்தூரில் முருகன் ஆகிபோர் பங்கேற்கிறார்கள்.


