தூத்துக்குடியில் மே 20 பொது வேலை நிறுத்தம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் தொழிலாளா் விரோதப் போக்கை கண்டித்து மே 20 ஆம் தேதி அகில இந்திய அளவில் ஏஐடியுசி, சிஐடியு ஐஎன்டியூசி, உள்பட 10 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் 70-க்கும் மேற்பட்ட சம்மேளனங்கள் பொது வேலை நிறுத்தம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.
இந்த வேலை நிறுத்தத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்துவது குறித்த இரண்டு கட்ட ஆலோசனைகள் நடைபெற்ற பின்பு மாவட்டம் முழுவதும் பிரச்சார இயக்கங்களை, துண்டு பிரசுர விநியோகம், வாகன பிரச்சாரம், தெருமுனை கூட்டம் ஆகிய வடிவங்களில் கொண்டு செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் தூத்துக்குடியில் தாளமுத்து நகரில் அனைத்து தொழிற்சங்ககளின் பிரச்சார இயக்கத்தை ஹெச்.எம்எஸ் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜ்குமார் துவக்கி வைத்தார்.
மட்டகடை ஒன்றாம் கேட் இரண்டாம் கேட், புதிய பேருந்து நிலையம், அண்ணா நகர், சிதம்பரநகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் ஏஐடியுசி சார்பில் பாலசிங்கம், தனலட்சுமி, ஞானசேகரன், சிஐடியு சார்பில் ரசல், சங்கரன் ரவிதாக்கூர், பெருமாள் வயண பெருமாள் ஆகியோரும் ஹெச்எம்எஸ் சார்பில் ராஜலட்சுமி ராஜ்குமார் ஏசிசிடியு சார்பில் சிவராமன், தொழிலாளர் முன்னேற்ற பேரவையின் சார்பில் கருப்பசாமி, செல்லப்பெருமாள் ஐஎன்டியுசி சார்பில் பாலகிருஷ்ணன், சுரேஷ் குமார் ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
சிதம்பர நகரில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் தொழிலாளர் முன்னேற்ற பேரவையின் மாவட்ட செயலாளர் சுசி ரவீந்திரன் பிரச்சாரத்தை நிறைவு செய்து பேசினார்.


