தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் சிறப்பு முயற்சியில் சி.எஸ்.ஆர் மூலம் காசநோயாளிகளுக்கு சத்துமாவு வழங்கும் நிகழ்ச்சி வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.D.A.J. ஜோசுவா பிரவுண் தலைமை தாங்கினார். சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.ச.செல்வகுமார் முன்னிலை வகித்தார்.
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா அனைவரையும் வரவேற்று பேசினார்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.D.A.J. ஜோசுவா பிரவுண் காசநோயாளிகளுக்கு சத்துமாவு வழங்கி பேசுகையில்,
காச நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை மட்டுமல்லாமல் சிகிச்சை காலங்களில் அவர்கள் சத்தான உணவு உண்ண வேண்டும்.
ஒருவரின் உடல் எடை குறைவாக உள்ளதா, ஆரோக்கியமானதா அல்லது அதிகமாக உள்ளதா என்பதை மதிப்பிடுவதற்கு பி.எம்.ஐ. எனப்படும் உடல் எடை குறியீடு
பயன்படுகிறது.
பி.எம்.ஐ. 18.5 க்கு கீழ் உள்ள காச நோயாளிகள் அனைவரும் குறைந்த எடையாளராக கருதப்பட்டு அவர்களுக்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., சிறப்பு முயற்சியில் சி.எஸ்.ஆர். மூலம்
சத்துமாவு வழங்கப்படுகிறது.
சத்து மாவானது காசநோயாளிகளுக்கு தொடர்ந்து ஆறு மாதம் வழங்கப்பட்டு நோயாளிகளின் எடை அளவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஏற்பாடு செய்து கொடுத்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு வல்லநாடு காசநோய் பிரிவு சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்கள்.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை பணியாளர்கள், காசநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


