தூத்துக்குடியில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு பாஜகவினர் மலர் அஞ்சலி செலுத்தி வணங்கினர்.
பாகிஸ்தான் இந்திய விமானநிலையங்கள் மற்றும் வெடிமருந்து கிடங்குகளை தாக்க முயன்றது, ஆனால் அவை முறியடிக்கப்பட்டன. பயங்கரவாத முகாம்களைத் தாக்க ஒரு நுணுக்கமான எல்லை தாண்டிய நடவடிக்கை திட்டமிடப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஐந்து இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
தூத்துக்குடி விவிடி சாலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு நடிகர் காசிலிங்கம் தலைமையில் பாஜகவினர் மலர் அஞ்சலி செலுத்தி வணங்கினர். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வீர வணக்கம் செலுத்தினர்.


