குருபெயர்ச்சியையொட்டி தூத்துக்குடி சிவன் கோவிலில் தட்சிணா மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராத நடைபெற்றது.
குருபகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு இன்று மதியம் 1.19 மணிக்கு பிரவேசம் செய்தார். இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் பிரசித்திபெற்ற, சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு 21 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரனை நடந்தது.
இதில் மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் தங்களுடைய ஜென்ம ராசிக்கு எள்ளு எண்ணெய் தேங்காய் பழம் வைத்து பரிகாரம் செய்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை ஐயப்பன் மற்றும் குரு பட்டர்கள் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


