தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் வந்து ஊருக்கு புகுவதற்கு காரணம் ஆற்றில் அதிகமாக வளர்ந்து நிற்கும் முள்செடி புதர்களே. எனவே இந்த முள்செடி புதரை அகற்ற தமிழக அரசுவுக்கு பல கோரிக்கை எழுந்து வந்தது. இதற்கிடையில் முள்செடிகள் மற்றும் புதர்களை அகற்றும் பணி கடந்த ஜுலை 6 ந்தேதி கலியாவூர் மருதூர் அணையில் துவங்கியது. இந்த பணியை கனிமொழி எம்.பி துவக்கி வைத்தார்கள். முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவர் லெட்சுமிபதி முன்னிலை வகித்தார். எக்ஸ்னோரோ நி-றுவனத்தின் மூலம் வாடகை இல்லா இயந்திரம் மூலம் , தனியார் மற்றும் அரசு உதவியுடன் நதியை சுத்தப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்தது. மருதூர் அணை, செந்நெல்பட்டி, ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி ஆகிய பகுதிகளில் இந்த பணி நடந்து முடிந்துள்ளது. தற்போது மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் அவர்கள் ஆலோசனை படி நிதி பெறப்பட்டு மீண்டும் இந்த பணி துவங்கியுள்ளது. கடந்த (2.02.2025) ஸ்ரீவைகுண்டம் கணியான் காலனியில் இருந்து ஆற்றுக்கரைக்குள் உள்ள முள்செடிகளை அகற்றும் பணி ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்கம் மேற்பார்வையில் துவங்கியது.
ஸ்ரீவைகுண்டம் & ஆழ்வார்திருநகரி இடையே உள்ள தாமிரபரணி ஆற்றில் முள்செடிகளை அகற்றி மாடல் தாமிரபரணியாக மாற்றி மரங்களை வளர்க்க வேண்டும் என உங்களை தேடி உங்கள் ஊரில் ஸ்ரீவைகுண்டம் வந்த மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத்திடம் வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் எக்னரோ வாடகை இல்லா இயந்திரம் மூலம் மாவட்ட ஆட்சியர்நிதி உதவி இணைந்து மீண்டும் முள்செடிகளை அகற்றும் பணியை துவங்க உத்தரவிட்டுள்ளார். நேற்று தொடர்ந்த பணியில் மாவட்ட வணிக சங்க பேரமைப்பு துணைத்தலைவர் சந்துரு, துணைத் செயலாளர் பொன்இசக்கி, ஸ்ரீவைகுண்டம் வியாபாரிகள் சங்க தலைவர் பெரியசாமி , சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன், எழுத்தாளர்முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் கலந்துகொண்டனர்.


