திருச்செந்தூரில் கடற்கரையில் குளித்தபோது, கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட பெண் பக்தரை போலீசார் பாதுகாப்பாக மீட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், படுக்கப்பத்து ஊரைச் சேர்ந்த ராஜு அவரது மனைவி ஜெயசுதா மற்றும் குடும்பத்தினரோடு அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில் வந்து கடலில் நீராடியபோது ஜெயசுதா என்பவர் கடலுக்குள் அலையினால் இழுத்துச் செல்லப் பட்டார்.
அப்போது திருக்கோவில் கடற்கரையில் பாதுகாப்பு அலுவலில் இருந்த காவலர்கள் தங்கம், பொற்செல்வன், முத்துமாலை, சித்ரா தேவி மற்றும் ஊர்க்காவல் படை சுதாகர், சூர்யா மற்றும் கடலோர பாதுகாப்பு குழுவினருடன் சேர்ந்து மேற்படி பெண் பக்தரை மீட்டு முதல் உதவி சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.


