தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 3-வது வடக்கு சரக்கு தளம் ஆழப்படுத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி ரூ.253 கோடியே 57 லட்சம் செலவில் வடக்கு சரக்கு தளம்-3-ஐ 14.20 மீட்டர் ஆழப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ராட்சத எந்திரம் மூலம் ஆழப்படுத்தும் பணி நடந்தது.
இந்த பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு உள்ளது. இதனால் வடக்கு சரக்குதளம் 3-ல் 14.20 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட கப்பல்கள் அனுமதிக்கப்பட உள்ளன. மேலும் மே 2025 முதல் நவீன துறைமுக நகரும் கிரேன்கள் உதவியுடன் சரக்கு ஏற்றுதல் மற்றும் இறக்குதல் பணிகள் தொடங்க உள்ளன.
இந்த ஆழப்படுத்தும் பணியில் இருந்து பெறப்பட்ட மண்ணை கொண்டு துறைமுகத்துக்கு 11 எக்டேர் நிலப்பரப்பும் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலம் சரக்கு சேமிப்புக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் துறைமுகத்தின் முழுமையான செயல்திறனும், சரக்குகள்


