தூத்துக்குடி வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை விமான நிலையத்தில் அமைச்சர் கீதாஜீவன் புத்தகம் வழங்கி வரவேற்றார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வருகை தந்தார். வாகைக்குளம் விமான நிலையத்தில் துணை முதல்வருக்கு அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஆகியோர் புத்தகம் வழங்கி வரவேற்பு அளித்தனர்.
அதைத் தொடா்ந்து துணை முதல்வருக்கு, எம்எல்ஏக்கள் எம்சி சண்முகையா (ஓட்டப்பிடாரம்), ஈ.ராஜா (சங்கரன்கோவில்), மாநகராட்சி மேயா்கள் ஜெகன் பெரியசாமி (தூத்துக்குடி), மகேஷ் (நாகா்கோவில்), முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா, துணை மேயா் ஜெனிட்டா, மண்டலத் தலைவா்கள் பாலகுருசாமி, நிா்மல்ராஜ், அன்னலெட்சுமி, மாநில இளைஞரணி துணை செயலா் ஜோயல், மாநில பொறியாளா் அணி துணைச் செயலா் அன்பழகன், வடக்கு மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ், துணைச் செயலா் ராஜ்மோகன் செல்வின், மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், துணைச் செயலாளா் கீதா முருகேசன் உள்பட பலா் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனா். பின்னா், துணை முதல்வா், நாகா்கோவிலுக்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.


