திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கடற்கரையில் மூவர் சமாதி அருகில் ஒரு வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் கோவில் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அவர் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு மூலக்காடு கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் கார்த்திக் பாபு (37) என்று தெரியவந்தது. அவர் எதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


