தூத்துக்குடி அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தனியார் நிறுவன காவலாளி உயிரிழந்தார்.
தூத்துக்குடி, முத்தையாபுரம் அருகேயுள்ள பொட்டல்காடு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கடற்கரையாண்டி (எ) சூரி மகன் சண்முகசாமி (48). இவருக்கு திருமணமாகி சந்தனகுமாரி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். சண்முகசாமி ஊருக்கு பின்புறம் உள்ள தனியார் ஜிப்சம் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மாலை பணிக்குச் சென்றுள்ளார். இன்று அதிகாலை 4 மணிளவில் அங்குள்ள டீக்கடைக்கு சென்று டீ குடித்துவிட்டு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


