தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நாளை (மே 2) தூத்துக்குடி வருகை தருகிறார்.
தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை (மே 2) வெள்ளிக்கிழமை தூத்துக்குடி வருகிறாா்.
விமான நிலையத்தில் துணை முதல்வருக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் பிற்பகல் 2.30 மணிக்கு மாபெரும் வரவேற்பு வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் நிா்வாகிகள், கட்சியினா் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் என மாவட்டச் செயலரும் அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.
குமரி மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி
மாலை 3.50 தூத்துக்குடி விமான நிலையம் வருகை
மாலை 4.50 மணி குமரி மாவட்ட எல்லையான காவல் கிணறு ஜங்ஷனில் கன்னியாகுமரி மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு
மாலை 5 மணி கங்கா காண்டியூர் திருமண மண்டபத்தில் மீனவரணி மாநில செயலாளர் ஏ ஜே ஸ்டாலின் இல்ல திருமண விழாவில் பங்கேற்பு
மாலை 6 மணி மதுரை விமான நிலையம் புறப்பட்டு செல்லுதல்
இரவு 9 மணி சென்னை புறப்படுதல்


