தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த புகழ், சரவணன் மற்றும் ரங்கராஜ் ஆகியோர் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி ஏற்பாட்டில் தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து விலகி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தூத்துக்குடி – எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர அவைத் தலைவர் ஜேசுதாஸ், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன், வட்டச் செயலாளர் சுரேஷ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், பகுதி இளைஞரணி அமைப்பாளர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


