தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த 47 வயதான திருநங்கை க.பொன்னி தனது அயராத உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தடைகளைத் தகர்த்து பி.எஸ்.சி. தன்னம்பிக்கையினால் கணித பட்டப் படிப்பினையும். நடனத்தின் மீதான தனது ஆர்வத்தினால் எம்.ஏ..பரதம் பயின்று. இன்று தலைசிறந்த நாட்டியக் கலைஞராகவும். சமூக சேவகியாகவும் உயர்ந்துள்ளார்.
தனது சொந்த முயற்சியால், வசவப்பபுரத்தில் அபிநய நிருத்தாலயா என்ற நடனப் பள்ளியைத் தொடங்கி. LIGU மாணவர்களுக்கு நடனம் கற்றுக்கொடுத்து வருகிறார். திருநங்கை என்ற அடையாளத்துடனே பல்வேறு மாவட்டங்களின் பொது விழாக்களில் பரத நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி சக திருநங்கைகளுக்கு முன்மாதிரியாக விளங்கி வருகிறார். மேலும், திருநங்கைகள் சுயமரியாதையுடன் வாழ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அவர்கள் நன்முறையில் வாழ்வதற்கு வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார்.
திருநங்கைகள் தங்களது அயராத முயற்சியால் கல்வியிலும், கலையிலும் சிறந்து விளங்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழும் திருநங்கை க.பொன்னி என்பவரின் சிறந்த சமூக சேவையைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் 2025-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது வழங்கப்பட்டது.
பொன்னி அவர்களுக்கு இந்த விருதை 15.04.2025 அன்று தலைமை செயலகத்தில் வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். அருகில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், அரசு செயலாளர் நா. முருகானந்தம், சமுக நலன் மற்றும் மகளிர் உரமைத்துறை செலயாளர் ஜெயஸ்ரீ முரளீதரன், லில்லி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


