புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.
புனித வெள்ளி அன்று தமிழ் நாடு முழுவதும் மதுகடைகளை மூட வலியுறுத்தி பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை போதை நோய் நலப்பணிக்குழு சார்பில் தூத்துக்குடியில் திரு இருதய போராலயம் (சின்ன கோயில்) வளாகத்தில் வைத்து தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டிபன் தலைமையில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. அதிமுக மாநில வர்த்தக அணி செயலளார் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கலந்து காெண்டு உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்தார்

இந்த நிகழ்வில் முன்னாள் ஆயர் இவான் அம்புரோஸ், மறை மாவட்ட முதன்மை குரு ரவி காலன், மறை மாவட்ட செயலாளர் ஆண்றனி ஜெகதீசன், பொருளாளர் பிரதீப், சிஇஎப்ஐ தேசிய பொதுச் செயலாளர் ஸ்டீபன், அகில இந்திய ஜனநாயக சிறுபான்மை மக்கள் உரிமைத் தலைவர், ஜெயராஜ், சபைகளின் மாமன்ற தலைவர் ஆயர் ஜஸ்டஸ், பொதுச் செயலாளர் சாம் செல்வராஜ், துணைத் தலைவர் சாமுவேல் மோசஸ், பிஷப் கால்டுவெல் கல்லூரி முன்னாள் தாளாளர் ஜெபனேஷர் மங்களராஜ், அன்னை பரதர் நல தலைமைச் சங்கம் தலைவர் சேவியர் வாஸ், பொதுச் செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் காஸ்ட்ரோ, அவைத்தலைவர் ஞாயம் ரொமால்ட், துணைத் தலைவர் ஹாட்லி, ஜெயந்தர ராஜ், செயலாளர் ராஜா போஸ் ரீகன், நிர்வாக செயலாளர் ஆர்தர் மச்சாது, செயற்குழு உறுப்பினர்கள் ஜெகன், பெப்பின் மிஸியர் உட்பட பங்கு மக்கள், சங்கங்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்


