தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள நத்தக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் லாசர். விசிக பிரமுகரான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் அம்பேத்கர் சிலை வளாகத்தில் நடந்த கூட்டத்திற்காக தனது இருசக்கர வாகனத்தை அம்பேத்கர் சிலை வளாகத்தின் முன்பு நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.
கூட்டம் முடிந்து வந்து பார்த்தபோது அவரின் இருசக்கர வாகனத்தை வந்து பார்த்தபோது காணவில்லை.
இதுகுறித்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் லாசரின் இருசக்கர வாகனத்தை மர்மநபர் ஒருவர் திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருச்செந்தூர் தாலுகா காவல்நிலையத்தில் லாசர் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவரை தேடி வருகின்றனர்.


