உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக தருவைகுளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாயக் கொடி கம்பங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ் சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர துறைகளுக்குச் சொந்தமான பொது இடங்கள் மற்றும் நிலங்களில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அனைத்து அரசியல் கட்சிகளும், சமூகம், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகளின் கொடி கம்பங்களையும் அகற்றிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சி, சமூகம், மதம், சங்கம் சார்ந்த அனைத்து கொடிக் கம்பங்களையும் 10.04.2025 தேதிக்குள் தங்கள் சொந்த செலவில், எவ்வித சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாத வகையில் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவித்துள்ளார். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியில் உள்ள அரசியல் கட்சி மற்றும் சமுதாயக் கொடி கம்பங்களைஅகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


