தூத்துக்குடி அருகே காணாமல் போன மூதாட்டி குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள போடம்மாள்புரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மனைவி வேலம்மாள் (70) இவர் நேற்று மதியம் 3 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்பு வீடு திரும்பவில்லை. இவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை போடம்மாள் புரம் குளத்தின் மதகு அருகே வேலம்மாள் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


