மதுரை, மார்ச் 28: தாமிரவருணி ஆறு மாசடைவதைத் தடுக்கக்
கோரிய வழக்கில், விரிவான செயல் திட்டத்தைத் தயாரிக்க, மத் திய நீர்வளத் துறை அமைச்சகத்தின் நிபுணரை நியமிப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழக அரசு தரப்பில் தெரிவித்ததை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதி மன்ற மதுரை அமர்வு, இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த காம
ராசு தாக்கல் செய்த மனு:
தாமிரவருணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதால் மாசடைந்து வருகிறது. அதுமட்டுமன்றி, படித்துறைகள், மண்டபங்கள் சிதி லமடைந்து வருகின்றன. ஆறு மாசடைவதைத் தடுப்பது மட்டு மன்றி, படித்துறைகள், மண்டபங்களை பழைமை மாறாமல் பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயர்நீதிமன்றம் தாமி ரவருணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க திட்ட அறிக்கை ஏதேனும் தயாரிக்கப்பட்டுள்ளதா என பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீர்வளத் துறை கண் காணிப்புப் பொறியாளர் வசந்தி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட நிபு ணர்தான் முதலில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்க வேண் டும். தாமிரவருணி ஆறு மாசுபடுவதைத் தடுப்பதற்கான விரிவான செயல் திட்டத்தைத் தயாரிக்க மத்திய நீர்வளத் துறை அமைச்ச கத்தின் நிபுணர் ஆலோசகரை நியமிப்பதற்குத் தேவையான பரிந் துரையை வழங்குமாறு நீர்வளத் துறை உயர் அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.
உரிய அனுமதி கிடைத்தவுடன் ஆறு மாசுபடுவதைத் தடுப்பதற் கான விரிவான திட்ட அறிக்கை உடனடியாக சமர்ப்பிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தவிட்டனர்


