பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள திருஇருதய சகோதரர்கள் இல்லத்தின் சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு இப்தார் நோன்பு திறப்பு விழா 26.3.25 அன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் திருவேத ஆகமம் , திருக்குர்ஆன், திருக்குறள், திருவாசகம் முதலான மறைகளிலிருந்து சகோதரிகள் வேத வரிகளை வாசித்தார்கள்.
திரு இருதய சகோதரர்கள் சபை அதிபர் அருள்திரு விக்டர் தாஸ் அடிகள் தலைமை வகித்தார். வழக்கறிஞர் ஜான் பிரிட்டோ வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக பாளையங்கோட்டை முஸ்லிம் அனாதை நிலையத்தின் தலைவர் எம் கே எம் கபீர், மேலப்பாளையம் முஸ்லிம் கல்வி கமிட்டியின் தாளாளர் செயலாளர் எல் கே எஸ் மீரான் முகைதீன், சேரன்மகாதேவி சேகர குருவானவர் கிப்சன் ஞானதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வி. பழனி, மாநிலக் குழு உறுப்பினர் பாஸ்கர், மேலப்பாளையம் செல்வன் மருத்துவமனை டாக்டர் பிரேமச்சந்திரன், எழுத்தாளர் மற்றும் ஆய்வாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, எஸ் டி பி ஐ ஹயாத் முகம்மது ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

, இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி பொறுப்பாளர் சகோதரி மடோனா உள்ளிட்ட பெருமக்கள், இந்த சிறப்பான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
நோன்பு திறந்து முடிந்ததும் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கு கிறிஸ்தவ பணிகள் நடக்கின்ற அந்த அருட்சபையில் பாங்கு சொல்லி தொழுகை நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமூக நல்லிணக்கத்திற்காக நடந்த இந்த நிகழ்ச்சி நெல்லையில் மிக முக்கிய நிகழ்வாக கருதப்பட்டது.


