கோவில்பட்டி எஸ்.எஸ்.டிஎம் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 160 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் பாரத் எப்ஐஹெச், நோக்கியா நெட்வொர்க், கேவி அசோசியேசன், டாடா எலக்ட்ரானிக்ஸ் உள்பட பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவர்களை நேர்காணல் செய்தனர். நேர்காணலில் கலந்து கொண்ட 250 மாணவர்களில் 160 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் செல்வராஜ், நிர்வாக குழு உறுப்பினர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி பேராசிரியர் சுருதி வரவேற்றார். நேர்காணலில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் நியமன ஆணைகளை வழங்கினார். இதில் கல்லூரி வேலைவாய்ப்பு இயக்குனர் விஜய கோபாலன், பேராசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் கற்குவேல் நன்றி கூறினார்.


