தூத்துக்குடியில் மருத்துவர் மற்றும் முடி திருத்துவோர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சி.ஐ.டி.யூ அலுவலகத்தில் நடைபெற்றது.
கௌரவத் தலைவர் சதாசிவம் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் வேலை அறிக்கை தாக்கல் செய்தார். சி.ஐ.டி.யூ மாநிலச் செயலாளர் ரசல், மாவட்ட தலைவர் பேச்சிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 25வது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற இருப்பதால் ஏப்.6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு மேல் கடையை விடுமுறை விட்டு செல்ல செல்வதாக முடிவெடுக்கப்பட்டது.
மேலும், சுதந்திரப் போராட்ட தியாகி எஸ். எஸ். விஸ்வநாததாஸ் 139 பிறந்தநாள் விழா குறித்து ஆலோசிக்கப்பட்டது. நலவாரியத்தில் பதிவு செய்யாத தொழிலாளிகள் அனைவரையும் பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டது. நிறைவாக பொருளாளர் வேல்முருகன் நன்றி உரையாற்றினார். துணைச் செயலாளர் முருகன், கருணாமூர்த்தி, நிர்வாக குழு உறுப்பினர் சஞ்சய், மற்றும் முன்னணி உறுப்பினர் கலந்து கொண்டனர்.


