சாத்தான்குளம் அருகே காரை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சவேரியார்புரம் நடுத் தெருவைச் சேர்ந்தவர் குமார் மகன் சங்கர் (29). இவர் அவரது காரை வீட்டின் முன்வழக்கமாக நிறுத்தி வைப்பாராம். இந்நிலையில் அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் தைக்கா தெருவைச் சேர்ந்த ததேயு ஜேசுதாசன் மகன் ஏதேன் ஜெமீலன் (31) சங்கர் கார் விடும் இடத்தில் கல் ஒன்றை வைத்ததாக கூறப்படுகிறது.
சங்கர் வழக்கம் போல் இன்று காரை வீட்டின் முன் நிறுத்த முயன்றபோது கார் கல்லில் மோதி சேதமானதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டத்தில் ஏதேன் ஜெமீலன், சங்கரை அவதூறாக பேசி தாக்கினார். இதில் காயமடைந்த சங்கர், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சங்கர் சாத்தான்குளம் போலீசில் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் வழக்குபதிந்து விசாரித்து ஏதேனை ஜெமீலனை கைது செய்து காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தார்.


