தூத்துக்குடியில் என்டிபிஎல் அனல்நிலைய ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி என்டிபிஎல் அனல் நிலையத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் தாகாடிகா டோலா பகுதியைச் சேர்ந்த ராம் மகன் மகேந்திரா பூனியான் வயது (49) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் முத்தையாபுரம் அம்மன் கோவில் அருகே தங்கி உள்ளார். நேற்று இரவு திடீரென மதுபோதையில் அங்குள்ள கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) ஷோபா ஜென்சி சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


