தூத்துக்குடியில் தமிழ்நாடு புதுமை முயற்சிகள் (TANII) இன்குபேஷன் மையத்தில் சர்வதேச வன தின விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
சர்வதேச வன தினமான இன்று, “வனம் மற்றும் உணவு” என்ற கருப்பொருளில் தமிழ்நாடு புதுமை முயற்சிகள் (TANII) இன்குபேஷன் மையத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்ட பசுமை உறுப்பினர், TANII உயிரியலாளர், தூத்துக்குடி வன சரக அதிகாரி ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள், அரசு ஐ.டி.ஐ கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வன ஊழியர்கள் பங்கேற்றனர்.


