தூத்துக்குடியில் மாநகராட்சி படிப்பக வளாகத்தின் நுழைவு வாயிலில் செயல்படும் கடையை அகற்ற வேண்டும் என பாஜகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையர் மதுபாலனிடம் அளித்த மனதில் கூறியதாவது “பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாநகராட்சி படிப்பக வளாகம். வஉசி கல்லூரி அருகே கட்டப்பட்டுள்ளது.
இந்த வளாகமானது கல்வி மற்றும் போட்டி நுழைவுதோவுக்கு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. இந்த படிப்பக வளாகத்தின் நுழைவு வாயிலின் உட்பகுதியில் வணிக நோக்கத்தில் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கூடும் கூட்டத்தின் காரணமாக படிப்பக வளாகத்திற்கு படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. படிப்பகத்தின் அமைதியையும் அதன் பயனையும் பாதிக்கிறது.
மேலும் சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகளை இந்த கடை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த படிப்பக வளாகம் செயல்படுவதை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுழையுவாயிலின் நோக்கத்தையே சிதைக்கும் விதமாகவும். வளாகத்தினுள் எழுதப்பட்டுள்ள உலகப் பொதுமறையான திருக்குறளை பாதிக்கு மேல் மறைத்து அவமானம் படுத்தும் விதமாகவும் இந்த கடை அமைக்கப்பட்டுள்ளது.
எனவே மாநகராட்சி ஆணையர், படிப்பக வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்த கடைக்கு உரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து அவ்வாறு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து இந்த கடையை உடனடியாக அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர் மாவட்ட துணைச் செயலாளர் குமரி சத்தியசீலன், ஓபிசி அணி மாநில துணைத்தலைவர் விவேகம் ரமேஷ், மாவட்ட வழக்கறிஞர் அணி பொதுச் செயலாளர் சின்ன தம்பி, மேற்கு மண்டல துணைத் தலைவர் லட்சுமணன், கட்சி நிர்வாகிகள் காசிலிங்கம், ராஜேஷ் கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


