தூத்துக்குடி மாவட்டத்தில் டிஜிட்டல் பண்ணைப்பள்ளி திட்டத்தின் கீழ் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் மற்றும் தகவலைகளை தேவையின் அடிப்படையில் கொடுத்துவருகிறது. மண்பரிசோதனையின் முக்கியத்துவம், விதைத்தேர்வு, விதைநேர்த்தி, நவீன நடவுமுறைகள், களை மேலாண்மை போன்ற தகவல்களை கொடுத்துவருகிறது. தற்போது நெல் நடவு நட்டு 30 முதல் 40 நாட்கள் ஆகிறது. தற்போது உர மேலாண்மை குறித்த தகவல் தேவைப்படுவதால் ஆடியோ கான்பிரன்ஸ் முறையில் மழவராயநத்தம் கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்சி நடைபெற்றது. வேளாண் அறிவியல் நிலையம், திருப்பதிசாரத்தின் வேளாண் வல்லுநர் முனைவர் லதா அவர்கள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். இதில் 30 க்கும் மேலான விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


