தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம், ஏரல், திருச்செந்தூர், சாத்தான்குளம், தூத்துக்குடி போன்ற தாலுகாகளில் நெல் பயிரிடப்பட்டு 40 முதல் 60 நாட்களை தாண்டி வளர்ந்து வருகிறது. ஒரு சில இடங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிரில் பூச்சி மற்றும் நோயின் தாக்கம் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் யூ டியூப் மூலம் நேரலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் நிலையத்தின் வல்லுநர் முனைவர் லதா அவர்கள் நெல் பயிரில் பயிரில் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். இந்த நிகழ்ச்சி மூலம் 100 க்கும் அதிகமான விவசாயிகள் கண்டு பயன்பெற்றனர்.


