ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் நீரோடி மீனவ கிராமத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் பெண்களின் சமூக, கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் சாதனைகளை நினைவு கூரும் வகையில் விழிப்புணர்வு கருத்துக்கள் விளக்கப்பட்டது. மேலும் விழிப்புணர்வு பாடல்கள் பாடப்பட்டது. பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மீன் அமிலம் தயாரிக்கும் பயிற்சியும் அதை எப்படி சந்தைப்படுத்துவது என்ற விளக்கமும் அளிக்கப்பட்டது. ராஜகுமார், முன்னாள் தோட்டக்கலை துணை இயக்குனர் பயிற்சியும் கருத்துரைகளும் வழங்கினார். ராஜாஸ் வேளாண் கல்லூரி மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் மூலம் பெண்கள் விழிப்புணர்வு குறித்து விளக்கினார். இதில் 30 கும் அதிகமான மகளிர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


