தூத்துக்குடி பட்டினமருதூர் உட்பட 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுக்கு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் இன்று (மாா்ச் 14) நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில், சிவகங்கை, தூத்துக்குடி பட்டினமருதூர், தென்காசி, நாகப்பட்டினம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் அகழாய்வுக்காக ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்


