குதிரை மொழி கற்குவேல் அய்யனார் கோவிலில் 108 அடி உயரத்தில் ஏழு நிலை ராஜகோபுரம் திருப்பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குதிரை மொழி கிராமத்தில் அருள்மிகு கற்குவேல் அய்யனார் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் இந்த கோவிலில் 108 அடி உயரத்தில் ஏழு நிலை ராஜகோபுரம் கட்டப்பட உள்ளது. இந்த திருப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருப்பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்பு யாக கால பூஜையும் நடைபெற்றது.
இதில் அறங்காவலர் குழு தலைவர் பாலசுப்பிரமணியம், உடன்குடி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாலசிங், கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ஏபி ரமேஷ், நகரச் செயலாளர் வாள் சுடலை, மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி அமைப்பாளர் மனோஜ், அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் செல்வி, ஆய்வாளர் முத்து மாரியம்மாள்,செயல் அலுவலர் காந்திமதி, அறங்காவலர்கள் குமார், முத்துக்குமார், பிரபா, முருகப்பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


