தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகம் 10ஆம் ஆண்டு துவக்க விழா கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் 10 ம் ஆண்டு துவக்க விழா பெருந்தலைவர் காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து கட்சி கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொட்டும் மழையிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமை தாங்கினார் நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார்.
விழாவில் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்டத் துணைச் செயலாளர் அருள்ராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சகாயராஜ், மாநகரச் செயலாளர் உதயசூரியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள், நாடார் பேரவை மாவட்ட மகளிர் அணி தலைவி சந்திரா, மற்றும் செல்வராஜ், சண்முக குமார், ஸ்ரீராம், ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


