நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் உள்ள மர்காஷிஸ் மிஷனெரி நினைவிடத்தில் தென்காசி பங்களா சுரண்டையைச் சார்ந்த கிறிஸ்தவ வரலாற்று சங்கத்தினர் மரியாதை செலுத்தினர்.
தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த பல்வேறு வரலாற்று ஆர்வலர்கள் நாசரேத் தூய யோவான் பேராலயத்திற்கு வருகை புரிந்தனர். நாசரேத் தூய யோவான் பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் வரவேற்றார். உதவி குரு பொன்செல்வின் அசோக்குமார், நாசரேத் தூய யோவான் பேராலயத்தின் வரலாறு மற்றும் அதன் சிறப்புகள் குறித்தும், மர்காஷிஸ் மிஷனெரி பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
மர்காஷிஸ் வாழ்விடம் குறித்தும், மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின் வரலாறு குறித்தும், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் விளக்கிக் கூறினார். வருகை தந்த அனைவரும், மர்காஷிஸ் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில்,கிறிஸ்தவ வரலாற்று சங்கத்தின் நிறுவன தலைவர் மன்னா செல்வகுமார்,உறுப்பினர் பிரின்ஸ், ஓய்வு பெற்ற ரயில்வே மேலாளர் ரவி மற்றும் வரலாற்றுச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


