தூத்துக்குடியில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஆதரித்து தூத்துக்குடி அண்ணா நகர், டூவிபுரம் பகுதி மக்களிடம், அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மூன்றாவதாக ஒரு மொழி கற்குக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி மாநக பாஜக சார்பில் காசிலிங்கம் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடத்தினார். இதில் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கையெழுத்திட்டதாக பாஜக பிரமுகர் காசிலிங்கம் தெரிவித்தார்


