முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகனை தரிசனம் செய்கின்றனர்.
மேலும் திருவிழா காலங்களில் லட்சகணக்கான பக்தர்கள் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்து முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த திருச்செந்தூர் முருகன் கோயிலில் மதம் வாரம் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். குறிப்பாக கந்த சஷ்டி, ஆவணி திருவிழா, கார்த்திகை தீப திருவிழா, வைகாசி விசாகத் திருவிழா, ஆவணி திருவிழா, தைப்பூசம் என பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும்.
இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று கேரளா மாநிலத்தில் இருந்து குழுவினராக வருகை தந்த 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருச்செந்தூர் தெப்பகுளம் அருகே ஒன்று கூடினர். அங்கு பறக்கும் காவடி உருவாக்கம் செய்யப்பட்டது. இந்த பறக்கும் காலடியில் நடுவில் உள்ள நபரின் முதுகில் இரும்பு கம்பி குத்தபட்டது. அதே போல் இருபுறமும் இரண்டு நபர்கள் தொழில் இரும்பை குத்தி பறக்கும் காவடி எடுத்து வந்தனர். இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் ஸ்பீக்கர்கள் கட்டப்பட்டு முருகனின் மலையாள மொழி பாடல் ஒலித்தது.
அந்த பாடலுக்கு ஏற்ற வைப் மூடில் வந்த பக்தர்களை பறவை காவடிய இருந்தபடியே ஆடினர். அதை பார்த்த அங்கிருந்த பக்தர்கள் அந்த காட்சிகளை மெய்சிலிர்த்து பார்த்தனர். அதை தொடர்ந்து அவர்களுடன் வந்த பக்தர் ஒருவர் சுமார் 20 பேர் அலகு குத்தி அங்கிருந்த பக்தர்களை பரவசப்படுத்தினார்.
மேலும் அவர்களுடன் வந்த பக்தர்கள் சிறுவர்கள் காவடி எடுத்தும் அலகு குத்தியும் பால் குடம் எடுத்தும் திருச்செந்தூரை வலம் வந்து முருகன் கோவிலில் தரிசனம் செய்தனர்.


