தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி பணியாளர் சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வங்கியில் தேவையான அளவு பணியிடங்களை நிரப்ப வேண்டும், தற்காலிக, ஒப்பந்த ஊழியர்களை நிரந்தர படுத்த வேண்டும், வாரத்தில் 5 நாட்கள் பணியினை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு தொழிற்சங்க நிர்வாகி கிருஷ்ண மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் வங்கி தொழிற்சங்க நிர்வாகி சன்னாசி வரவேற்றார். தமிழ்நாடு கிராம வங்கி தொழிற்சங்க நிர்வாகி தங்க மாரியப்பன், தமிழ்நாடு கிராம வங்கி தொழிற்சங்க நிர்வாகி ஹெலஸ்டன், எஸ்பிஐ தொழிற்சங்க நிர்வாகி செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக எஸ்பிஐ தொழிற்சங்க நிர்வாகி நன்றியுரை ஆற்றினார்.


