கயத்தார் அருகே கிணற்றில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் தெற்கு சுப்பிரமணியபுரத்தில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள கிணற்றில் இறந்த நிலையில் ஆண் சடலம் கிந்தது. இதுகுறித்து தகவல் அறந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவரின் வலது கையில் வீரன் சுந்தரலிங்கனார் உருவமும், இடது கையில் லாவண்யா லாவணி என்று பெயரும் பச்சை குத்தப்பட்டுள்ளது. அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவரது மரணம் தொடர்பாக கயத்தார் காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நபர் குறித்து அடையாளம் தெரிந்தவர்கள் கயத்தார் காவல் நிலையத்திற்கு 9498101848 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


