முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை உயர்நீதி மன்றதில் தாமிரபரணியில் சாக்கடையை கலக்க கூடாது, மண்டபங்களை காக்க வேண்டும் என வழக்கை தாக்கல்செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், புகழேந்தி அவர்கள் முன்னிலையில் கடந்த 4 ந்தேதி விசாரனைக்கு வந்தது. நெல்லை கலெக்டர் சுகுமார் பதவியேற்று குறைந்த நாட்களே ஆவதால், தாமிரபரணி உற்பத்தி ஆகும் இடத்தில் இருந்து ஆய்வு செய்ய வேண்டி இருப்பதால், அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரியதை அடுத்து மார்ச் 18 ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


