தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கணேசபுரத்தில் ஹேண்டில் ஹேண்ட் இந்தியா நிறுவனத் தலைவர் டாக்டர் கல்பனா ஷங்கர் ஆலோசனைப்படி மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் வழிகாட்டுதல் படி தூத்துக்குடி மாவட்ட திட்ட அலுவலர் ஜெயா ஒருங்கிணைப்பில் தூத்துக்குடியில் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை சேகரித்து தரம் பிரித்து பூமியை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மறுசுழற்சி பாதுகாவலர்களை கண்டெடுத்து புதுமையான வழிமுறைகளுடன் இத்திட்டமானது மூன்று படிநிலைகளுடன் (ENGAGE, EDUCATE, and EMPOWER) முறையில் செயல்பட்டு வருகிறது.
மேலும் இந்த குப்பை சேகரிப்பவர்களுக்கான எழுத்தறிவு என்ன அறிவு மற்றும் தொழில் மேம்பாட்டு பயிற்சி அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட 11 தலைப்புகளில் பயிற்சி நடத்தப்பட உள்ளது.
ஏரல் கணேசபுரத்தில் நடத்தப்பட்ட பயிற்சியில் மறுசுழற்சி பாதுகாவலர் பிளாஸ்டிக் மறுசுழற்சி பாதுகாவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தூத்துக்குடி மாவட்ட திட்ட அலுவலர் ஜெயாஏற்பாடு செய்துள்ளார் கலந்து கொண்டனர்.


