அய்யா வைகுண்டர் அவதார தினம் 2025
“வர்ணாஸ்ரம தர்மத்தை” உதறிதள்ளி
“தாழக்கிடப்பாரை தற்காப்பதுவே தர்மம்”
என்ற அடிப்படை மானுடவியலை சொன்னவர் அய்யா வைகுண்டர் …
இன்றைய தமிழகத்தின் தென்பகுதி, அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சாதிய அடுக்குமுறை வானளவிற்கு வளர்ந்து சம்மணமிட்டு அரசு பரிபாலனம் செய்த காலத்தில் …
தாலிக்கு வரி, காலில் போடும் செருப்புக்கு வரி ,ஓடு போட்ட வீடு கட்ட கூடாது , தின்னை வைத்து வாசல் அமைக்க கூடாது , பெண்கள்
ரவிக்கை அணிய கூடாது, வளர்ந்த மார்புக்கு வரி் என இன்றை காலக்கட்டத்தில் சொல்லுவதற்கு கூட வாய்கூசும் அளவிற்கு அநியாய வரிகளை விதித்து கொடுமைபடுத்தியது திருவிதாங்கூர் அரசு. இந்த கொடுமைகளுக்கு பயந்து மார்பை அறுத்தெறிந்த கதறவைக்கும் வரலாற்றையும் தமிழகத்தின் தென்பகுதி கொண்டுள்ளது…
“சில்லு கருப்புகட்டி சீரகமிட்டே காய்ச்சி கொல்லைபுறமாக கொண்டு வா என்று அடிப்பான்”
வீட்டின் முன்வாசல் வழியாக வரக்கூடாது, பின்வாசல் வந்து அப்படியே செல்லவேண்டும் …
இதை கடுமையாக எதிர்த்தவர் தான் அய்யா வைகுண்டர் !
அரசியவாதியாக அல்ல ஆன்மீக வாதியாக அதுவும் வர்ணாஸ்ரம தர்மத்தை உடைத்த ஆன்மீக வாதியாக …அறத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட ஆன்மீகவாதியாக ,
யார் யாரை தொட்டால் தீட்டு என்றார்களோ…சொன்னவர்களையே தீட்டு என ஒதுக்கி வைத்தவர்.
அய்யாவழி என்ற அன்பும், அறமும் இணைத்த ஆன்மீக பாதையை உருவாக்கியவர் .
அய்யா வைகுண்டர்


