கயத்தாறு அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 2 பவுன் நகையை திருடிய மர்ம நபரை போலீசார தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே திருமலாபுரம் தெற்கு தெருவில் வசித்து வருபவர் சுப்புராஜ் (45). விவசாயி. இவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் காலையில் வீட்டை பூட்டிவிட்டு சிவகாசியில் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றனர். இந்த நிலையில் அன்று இரவு மர்மநபர் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றுள்ளார்.
அங்கு பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை திருடிக்கொண்டு தப்பி சென்று விட்டார். நேற்று காலையில் திரும்பி வந்த சுப்புராஜ் குடும்பத்தினர் வீட்டில் நடந்த திருட்டு சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சுப்புராஜ் கொடுத்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஆர்தர்ஜஸ்டின் சாமுவேல் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவருகின்றனர்.


