தூத்துக்குடி சேர்வைகாரன்மடம் கிராம விவசாய அபிவிருத்தி சங்கத்தின் ஆண்டு விழாவில் கனிமொழி எம்பி, மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்றனர்.
தூத்துக்குடி சேர்வைகாரன்மடம் கிராம விவசாய அபிவிருத்தி சங்கத்தின் ஆண்டு விழா பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு, “விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசானது எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
விழாவில் சண்முகையா எம்எல்ஏ, மற்றும் விவசாய சங்கத்தின் நிர்வாகிகள், விவசாய பெருமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


