தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 44-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவில் கல்லூரி செயலர் ஷிபானா, முதல்வர் ஜெஸ்ஸி பர்னாண்டோ, தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் ரீத்தா மற்றும் கல்லூரியின் பல்வேறு துறைத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர். மதுரை வருமான வரி (விசாரணை) கூடுதல் இயக்குநர் மைக்கேல் ஜெரால்ட் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார். கல்லூரி முதல்வர் ஆண்டு அறிக்கையினை வாசித்தார். விழாவில் 700 மாணவியர்கள் பட்டங்களைப் பெற்றனர்


