தூத்துக்குடி மாவட்டத்தில் 90 தேர்வு மையங்களில் பிளஸ்-2 பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. 19,496பேர் தேர்வினை எழுதுகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ்-2 பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. இத் தேர்வு இன்று தொடங்கி மார்ச் 25 வரை நடைபெறவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 90 தேர்வு மையங்களில் 8887 மாணவர்கள், 10609 மாணவிகள் என மொத்தம் 19,496 தேர்வர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வினை எழுதுகின்றனர்.
ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் போதுமான இடவசதி, சுத்தமான குடிநீர் மற்றும் தூய்மையான கழிப்பறை வசதிகள் உள்ளதா என்பதனை உறுதி செய்திட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு உரிய போக்குவரத்து வசதி, காவலர் பாதுகாப்பு வசதி, தடையில்லா மின்சார வசதி போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


