தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பண்ணை பள்ளி திட்டத்தினை ரிலையன்ஸ் அறக்கட்டளை செயல்படுத்தி வருகிறது. நெல், உளுந்து மற்றும் மக்காசோளம் பயிரிடப்படும் வட்டாரங்களில் விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் நிலத்தை பண்படுத்துதல், உரமேலாண்மை, நீர்மேலாண்மை மற்றும் நோய் மேலாண்மை குறித்து பல்வேறு தொழில்நுட்பங்கள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக விவசாயிகளிடத்தில் மண் பரிசோதனையின் முக்கியத்துவத்தை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கொம்புக்காரநத்தம், செக்காரக்குடி, பூவாணி கிராமங்களில் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகள் வேளாண்மைத்துறை மூலம் பரிசோதனை செய்யப்பட்டு மண்வள அட்டை தயார் செய்யப்பட்டது. அந்த மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டு முருகன், வேளாண் வல்லுநர், ஸ்கேட் வேளாண் அறிவியல் நிலையம் அவர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.


